இராகலை தீ விபத்து ; கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 3

26 Oct, 2021 | 09:58 AM
image

நுவரெலியா மாவட்டத்தில் இராலை மத்திய பிரிவு தோட்டத்தில்  ஐந்து உயிர்களை காவுகொண்ட  கோர தீ விபத்து சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி  நீதிபதி உத்தரவுவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று  திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வலப்பனை பிரதேச மாவட்ட  நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் இன்று இந்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரன் வயது (27)  என்பவரை இராகலை பொலிஸார் கடந்த 12 ஆம்  திகதி  கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தங்கையா இரவீந்திரனை  அன்றைய தினம் மாலை வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இராகலை பொலிஸார் ஆஜர்படுத்தியிருந்தனர். இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட இவரின் வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட நீதவான் இன்று 25 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை பதுளை சிறைச்சாலையிலிருந்து  சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதி மன்ற சிறைக்கூட்டில் வைத்தனர்.

அதன் பின் இராகலை மத்தியப்பிரதேச தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தங்கையா இரவிச்சந்திரனை மன்றில் ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவுவிட்டிருந்தது.

இதையடுத்து சந்தேக நபரை நேற்று சிறைச்சாலை அதிகாரிகள் நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதன்போது சந்தேக நபர் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை ஆனால் சந்தேக நபர் தொடர்பாக இராகலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் வழக்கை விசாரித்த நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை அறிக்கை மரண விசாரணை அறிக்கை பிரேத பரிசோதணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நீதி மன்றத்தில் அடுத்த வழக்கில் சமர்பிக்க பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதேநேரத்தில் இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பதாகவும் அதுவரை சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கடலில் காணாமல் போன மீனவர்கள்...

2026-03-06 14:51:06
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு:...

2026-03-06 14:32:34
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

2026-03-06 14:00:29
news-image

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு;...

2026-03-06 13:41:47
news-image

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய...

2026-03-06 14:01:02
news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19