முல்லேரியா, கொட்டிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

May be an image of 2 people, people standing and outdoors

இன்று காலை 06.30 முதல் 07.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 42 வயதுடையவர், காயமடைந்தவர் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்குப் குற்றப் புலனாய்வுப் பிரிவு / நுகேகொடை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.