கொழும்பிலிருந்து வருகைதந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு

Published By: Priyatharshan

21 Sep, 2016 | 04:24 PM
image

(எஸ்.என். நிபோஜன்)

கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகொழும்பிலிருந்து வருகைதந்த விசேட தடகவியல் பொலிசாரால் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகைதந்த பகுப்பாய்வு குழுவினர்தீ விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 125 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்போது 100 கடைகள் முற்றாக எரிந்ததோடுஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும்விபத்திற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் தற்போது பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன்  தீவிபத்து வெள்ளிக்கிழமை நடைபெற்று உள்ளமையால் குறித்த தினத்தில் கடைகளில் விளக்கு வைத்து வழிபடுவது வழக்கம் அதனால் குறித்த தீவிபத்து ஏற்ப்பட்டிருக்குமா அல்லாது மின் ஒழுக்கினால் தீவிபத்து நடைபெற்று இருக்குமா  அல்லது யாரும் தீவைத்திருப்பார்களா என்ற பல கோணங்களில் பகுப்பாய்வினையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49