உள்ளுராட்சி மன்ற தேர்தலை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிற்கு முன்னர் அறிவிக்க முயற்சிப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.  ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது.   தேர்தலை பெற்றுக் கொள்வதற்கு சட்ட ரீதியாகவும் ஜனநாயக மக்கள் போராட்டங்கள் ஊடாகவும் கூட்டு எதிர் கட்சி களமிறங்கும் என்று கூட்டு எதிரணியின்   பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.  

பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட  கூட்டு  எதிரணியின் குழுவினர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை   சந்தித்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில்  கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.