(எம்.எப்.எம்.பஸீர்)
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்டோரினால் நடாத்தப்பட்ட சூம் கலந்துரையாடலை மையப்படுத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (25) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆட்சேபித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 23 ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் சூம் தொழில் நுட்பம் ஊடாக நடாத்தப்பட்ட கலந்துரையாடலில், கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை தாக்குதல் நடாத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவன் சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்டோருக்கு இலங்கையின் உளவுப் பிரிவுகள் நிதி மற்றும் ஏனைய உதவிகளை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனை முற்றாக நிராகரிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் மேஜர் ஜெனரால் சுரேஷ் சாலே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த நேரத்தில் பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலே, சஹ்ரான் ஹாஷீம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டதாக அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ விவரித்ததாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தாம் எந்தவொரு நிலைமையின் கீழும் எந்தவொரு தினத்திலும் சஹரான் ஹாசிம் அல்லது அவருடைய வழியை பின்பற்றியவர்களுடன் தொடர்புகளை பேணவில்லை என அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளின் நோக்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், வேண்டுமென்றே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதும், தனது உயிருக்கும் தனது குடும்பத்தரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏர்படுத்துவதுமாகும் என மேஜர் ஜெனரால் சுரேஷ் சாலே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையிலேயே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அவர் இந்த சி.ஐ.டி. முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM