அரச தலைவர்களின் செயற்பாட்டால் மக்கள் வாழ்வதற்கு உகந்த நாடல்ல என்ற பெயரை இலங்கை பெறும் - ஓமல்பே சோபித தேரர்

Published By: Digital Desk 4

25 Oct, 2021 | 09:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சீனாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்படும் உரத்தை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வணிக மேல்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, சீன நாட்டு நிறுவனத்திற்கு நிதி வழங்குவதற்கு மாத்திரம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சீன நிறுவனம் குறித்த உர தொகையை அரசாங்கத்திற்கு பணமில்லாமல் அன்பளிப்பாக கூட வழங்கலாம், அரசாங்கமும் அதனை பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க  வேண்டும் - ஓமல்பே சோபித தேரர் | Virakesari.lk

கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனாவின் குவின்ங்டாவோ நிறுவனம், மற்றும் அதன் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்படும் உயிரிய சேதன பசளைக்கு நிதி செலுத்த வேண்டாம் என கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை உர நிறுவனம்மற்றும் சுற்றுசூழல் ஆய்வளர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய வணிக மேல் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் காலநிலைக்கும், மண்வளத்திற்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் சீன நாட்டிலிருந்து வரும் கப்பலில் உள்ள சேதன பசளையில் அடங்கியுள்ளது. ஆகவே அந்த உரத்தை நாட்டுக்குள் கொண்டு வர வேண்டாம்.என விவசாயத்துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கை உரக்கூட்டுத்தாபனம் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவிற்கு அமைய அந்நிறுவன உரத்திற்கு நிதி வழங்குவது இடைநிறுத்தப்படும்.

ஆனால் எமக்கு பணம் வேண்டாம்,இலவசமாக உர தொகையை அன்பளிப்பு செய்கிறோம் என அந்த நிறுவனம் குறிப்பிடுமா என்று தெரியவில்லை.

அந்த உர தொகையை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு வணிக மேல்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. நிதி வழங்குவதற்கு மாத்திரம் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.கொண்டு வரப்படும் உரம் அன்பளிப்பாக நாட்டுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் இலங்கை பெயர் வெகுவிரைவில் உலகின் குப்பைகள் களஞ்சியப்படுத்தும் நாடு என மாற்றமடையும்.

சீனாவில் இருந்து வரும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கவும் வாய்ப்புண்டு.

அரச தலைவர்களினதும், அரசாங்கத்தினதும் தவறான தீர்மானங்கள் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை மக்கள் வாழ்வதற்கு உகந்த நாடல்ல என்ற பெயரை பெறும் அவல நிலைக்கு தள்ளப்படும்.என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31