வடக்கை இராணுவ மயப்படுத்தவாபுதிய கோர்ப்ஸ்?

By Digital Desk 2

25 Oct, 2021 | 08:59 PM
image

சுபத்ரா

ஒக்டோபர் 17ஆம் திகதியை இலங்கைஇராணுவம், அதிஷ்டம் மிக்க நாட்களில் ஒன்றாக கருதுகிறது.

1990ஆம் ஆண்டு ஒக்டோபர்17ஆஆம் திகதி - தீபாவளி தினத்தன்று, பலாலி படைத்தளத்தினதும், காங்கேசன்துறைதுறைமுகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கட்டுவன், வசாவிளான்,மாவிட்டபுரம், கீரிமலை, தெல்லிப்பழை வரை பலாலி பெருந்தளத்தின் புற எல்லைகளை,விரிவாக்குவதற்கான ஒப்பரேசன் ஜெயசக்தி இராணுவ நடவடிக்கைதொடங்கப்பட்டது.

அதுபோலவே, 1995 ஒக்டோபர்17ஆம் திகதி, புத்தூர், அச்செழு ஆகிய முன்னரங்க நிலைகளில் இருந்து தொடங்கப்பட்டஒப்பரேசன் ரிவிரெச நடவடிக்கையின் மூலம், வலிகாமம் பிரதேசம் முதலிலும், அதனைத்தொடர்ந்து, யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாகவும் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆண்டு அதே, ஒக்டோபர் 17ஆம் திகதி, இலங்கை இராணுவத்தில்முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இலங்கை இராணுவத்தில் இதுவரைஇருந்து வந்த, பிராந்திய படைகளின் தலைமையங்களின் எண்ணிக்கை, ஏழில் இருந்து ஆறாககுறைந்திருக்கிறது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வன்னி,கிழக்கு, மேற்கு, மத்திய படைகளின் தலைமையகங்கள் மட்டும் இப்போது செயற்படு நிலையில்உள்ளன.

கிளிநொச்சி படைகளின் தலைமையகம், இப்போதுபுதிய முதலாவது கோர்ப்ஸ் (1 Corps) படையணியின் தலைமையகமாக மாறியுள்ளது.

இலங்கை இராணுவம், தனது வரலாற்றில்முதலாவது கோர்ப்ஸ் ஐ கடந்த 17ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது.

சாலியபுரவில் உள்ள கஜபாபடைப்பிரிவு தலைமையகத்தில் நடந்த புதிய கோர்ப்ஸ் அறிமுக நிகழ்வில், பாதுகாப்புசெயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பங்கேற்றிருந்தார்.

அதன் பின்னர், ஜெனரல் கமல் குணரத்னவும், ஜெனரல் சவேந்திரசில்வாவும் கிளிநொச்சிக்குச் சென்று,முதலாவது கோர்ப்ஸ் தலைமையகத்தை திறந்து வைத்திருந்தனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-24

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right