சிவலிங்கம் சிவகுமாரன்

உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவுக்கு முதன் முதலாகச் சென்று  தரையிறங்கியவர்கள்  என்ற பெருமையை எமது  நாட்டின் அமைச்சர்நாமலும் அவரோடு சென்ற சுமார் 100 பௌத்த பிக்குகளும் பெற்றிருக்கின்றனர். 

இந்த பயணத்தில்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ.தொ.கா பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் பிரதமரின்இணைப்புச் செயலாளரான செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டிருக்கிறார். 

உத்தர பிரதேசத்திலமைந்த குஷிநகர் ஆனது அனைத்துலக பௌத்தர்களின் (பௌத்தசிங்களவர்களினது மட்டுமல்ல) புனித தலமாக விளங்குகின்றது.  பௌத்த கோட்பாட்டை உருவாக்கிய சித்தார்த்த கௌதமர், பிறந்த இடம் நேபாளநாட்டின் லும்பினி ஆகும். பின்பு ஞானம் பெற்று புத்தர் ஆன பிறகு தனது 80 ஆவதுவயதில் அவர் பரிநிர்வாணம் அடைந்த நகரமே உத்தர பிரதேசத்தின் குஷி நகரம். 

அங்கு அமைக்கப்பட்ட விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்கேஇலங்கையிலிருந்து சுமார் 110 பேர் விசேட விமானத்தில் சென்றிருந்தனர். 

இவ் விமான நிலையத்தை கடந்த 20 ஆம் திகதி  இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  குஷி நகரத்தின் சிறப்புகள் என்னவென்றால் புத்தர் பரிநிர்வாணம்அடைந்த  கோவில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடம்,அவரது அஸ்தி பாதுகாக்கப்படும் பகுதி என முக்கியமான அம்சங்கள் உள்ளன.  

உத்தரபிரதேசமானது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாகும். முதல்வராகஇருப்பவர் யோகி ஆதித்யநாத். இந்த நிகழ்வில் இலங்கை நாட்டின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் நாமல் இந்திய பிரதமர் மோடிக்கு மும்மொழி பகவத் கீதை நூலைஅன்பளிப்பாக வழங்கினார். 

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே 2500 வருடங்களாக காணப்படும்நட்புறவின் அடையாளமாகவும் பாரத தேசம் இந்த உலகிற்கு தந்த மிக புனிதமான நூாலாகவும்விளங்கும் பகவத் கீதை மும்மொழி வெளியீட்டின் முதற் பிரதியாகவும் இந்த பகவத் கீதைநூல் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூலில் தெரிவித்துள்ளார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-24

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.