உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் கடந்த 20ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலைத்தில் இலங்கையில்இருந்து சென்ற விமானமே முதன்முதலாக தரையிறங்கியது. 

இவ்வாறு தரையிறங்கிய விமானத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கப்பிரதிநிதிகளும், பௌத்த தேரர்களும் பயணமாகியிருந்தனர். விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதன்பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில்பிரத்தியேகமான சந்திப்பொன்று நடைபெற்றது. 

கடந்த காலங்களில் தந்தையாரான மஹிந்த ஜனாதிபதியாகவும், பிரதமராகவும், எதிர்க்கட்சித்தலைவராகவும்இருக்கும் போது பிரதமர் மோடியைச் சந்தித்த வேளைகளில் நாமல் ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.மோடியுடனான அறிமுகம் அவருக்கு இருந்தது. 

ஆனால், பிரதமர் மோடியை அமைச்சர் நாமல் தனியாகச் சந்திப்பது இதுவே முதற்தடவையாகும்.இவ்வாறான நிலையில் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. 

இதன்போது, நாமலின் பெரிய தந்தையாரான சமல் ராஜபக்ஷ, தந்தயாரான மஹிந்த ராஜபக்ஷ,சிறிய தந்தையர்களான கோட்டாபய மற்றும் பஷில் ஆகியோரின் சுக நலன்களை பிரதமர் மோடி விசாரித்திருக்கின்றார்.

அதனைத்தொடர்ந்து நாமலின் திருமண நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியாதுபோனமைக்கு வருத்தம் வெளியிட்டிருந்தார். அதன்போது, உங்களின் (மோடியின்) பிறந்த தினத்தில்தான் எனது திருமணமும் நடைபெற்றது என்பதை நினைவூட்டியிருக்கின்றார் நாமல்.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-23

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.