அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது : 69 இலட்சம் மக்களின் ஆதரவு குறைவடையவில்லை - எஸ்.எம்.சந்திரசேன

Published By: Digital Desk 3

26 Oct, 2021 | 09:05 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளப்படும் நெல் விளைச்சலுக்கு 80 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் சேதன பசளை திட்டத்திற்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அரசியல் இலாபம் தேடிக்கொள்கிறார்கள். 

போராட்டத்தினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. 69 இலட்ச மக்களின் ஆதரவு குறைவடையவில்லை என காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும்குறிப்பிடுகையில்,

1960 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் பாராம்பரிய விவசாயத்தில் சேதன பசளை முறைமை தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

1960 ஆம்ஆண்டுக்கு பிறகு இரசாயன உரம் விவசாய பயிர்ச்செய்கையினை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.இரசாயன உரபாவனையினால் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மாத்திரமல்ல மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 160,000 ஆயிரம் பேர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொலன்னறுவை மாவட்டத்தில்தான் அதிகளவானோர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு வருடத்தில் மாத்திரம் 12 ஆயிரம் பேர் புதிதாக நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதுடன், 10 ஆயிரம் பேர் வருடமொன்றிற்கு மாத்திரம் நீரழிவு நோயினால் மரணிக்கிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் எதிர்கால தலைமுறையினரது நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இரசாயன உரபாவனை மற்றும் இறக்குமதியை தடைசெய்து சேதன பசளை திட்டத்தை செயற்படுத்தினார். அரசியல் நோக்கத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதி சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை.

சேதன பசளை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. போராட்டத்தில் ஈடுப்படுபவர்களில் 10 சதவீதமானோர் உண்மையான விவசாயிகள் ஏனையோர் அனைவரும் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள்.

பெரும்போகத்திற்கு தேவையான சேதன பசளை மற்றும் திரவ உரம் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சேதன பசளையினை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளப்படும் நெல்லுக்கு 80 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும். ஆகவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. 69 இலட்ச மக்களின் ஆதரவு குறைவடையவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19