வேட்பாளர்கள் தெரிவில் முஸ்லிம் கட்சிகள் விட்ட தவறு

Published By: Digital Desk 2

25 Oct, 2021 | 04:42 PM
image

எம்.எஸ்.தீன்

“முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின்தலைவர்கள் ஒரு திசையிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு திசையிலும் தொடர்ந்தும்அரசியல் செய்ய முடியாது”

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்தியாவின் அழுத்தம்கிடையதென்று தெரிவித்துக் கொண்டாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் இந்தியாஅழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். 

இந்நிலையில் அரசியல் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலுக்குரிய ஆயத்தங்களில்ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் இத்தகைய நிலையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தார். 

கட்சிக்குள் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஒரு சில உயர்பீடஉறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆதரவாளர்களிடையே எத்தகைய தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது என்பதனை இந்த விஜயத்தின் போது அறிந்து கொள்வதனையும் ரவூப் ஹக்கீம்நோக்கக் கொண்டிருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின்நடவடிக்கைகளில் அதிருப்பியுடன் இருப்பதனை அறிந்து கொண்டார். 

முஸ்லிம் கட்சிகளை பொறுத்தவரை தேசிய பேரினவாதக் கட்சிகளைப் போன்று செயற்படமுடியாது. தேசிய பேரினவாதக் கட்சிகளின் நடவடிக்கைகளில் பெரிய வேறுபாடுகளை காண முடியாது.அக்கட்சிகள் பௌத்த சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்காக சட்ட விதிகளைக் கூட அக்கட்சிகள் மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம்கட்சிகள் அவ்வாறு செயற்பட முடியாது. தற்போது பெரும்பாலும் சிறுபான்மையினக் கட்சிகள்தேசிய பேரினவாதக் கட்சிகளோடு இணைந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-20

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52
news-image

நீளும் நீதிக்கோரிக்கை

2023-03-18 14:06:47
news-image

சிக்கல்களை ஏற்படுத்தும் வொஷிங்டன், சீன இசைவு

2023-03-18 13:59:37
news-image

முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூடிக்கதைப்பது கூட சாத்தியமில்லையா?

2023-03-18 13:13:37
news-image

சிறப்புரிமை விவகாரத்தை விவாதிப்பதற்கு தீர்மானம்

2023-03-18 22:33:55
news-image

கையேந்திகளை உருவாக்கும் நாடு

2023-03-18 13:08:39
news-image

தேர்தலை நடத்தாது மாதாந்தம் 135 மில்லியனை...

2023-03-18 13:07:15