தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Huawei ஸ்மார்ட்ஃபோன் ஒன்றின் மூலமாக நபர் ஒருவரின் உயிர் பாதுகாக்கப்பட்டிருப்பது இது முதலாவது சந்தர்ப்பமல்ல. கடந்த ஆண்டும் கோதமாலாவைச் சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் உயிரை Huawei P7 பாதுகாத்திருந்தது.

கென்யாவில் ஆய்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் தமது Media Pad ஐ பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்திலிருந்து உயிர் பிழைத்திருந்தார்.

இதுபோன்ற செய்திகள் iPhone கள் மற்றும் சம்சங் கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் வெளியாகியுள்ளன. இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த கையடக்க தொலைபேசிகள் வலிமையானவை என்பதுடன் குண்டு துளைக்காத திறன் வாய்ந்தனவாகவும் அமைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது.

இன்றைய காலகட்டத்தில் துப்பாக்கிச்சன்னங்களை கையடக்க தொலைபேசிகள் தடுப்பது என்பது அதிர்ஷ்டவசமான சம்பவங்களாக அமைந்திருந்த போதிலும் Huawei போன்ற ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றிரூபவ் தமது உற்பத்தி மற்றும் தர கட்டுப்பாடுகள் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தக நாமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால், 100 மில்லியனுக்கும் அதிகமான கையடக்க தொலைபேசிகளை 170க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற உலகின் முதல் மூன்று சிறந்த கையடக்க தொலைபேசி வர்த்தக நாமங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

தனது உற்பத்திகளின் தரம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான Huawei இடம் பரிசோதனை ஆய்வுகள் காணப்படுவதுடன் துறையின் முன்னணி பரிசோதனை ஆய்வுகூடங்களுடன் கைகோர்த்துள்ளது.

Huawei நுகர்வோர் வியாபார பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் யு கருத்துத்தெரிவிக்கையில்,

“Huawei ஐ பொறுத்தமட்டில் தரம் என்பது நெறிமை மற்றும் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. எமது உற்பத்திகளின் தரத்தை உறுதி செய்வதற்கு முறையான மேற்பார்வை அம்சங்களை நாம் கொண்டுள்ளோம்” என்றார்.