(எம்.மனோசித்ரா)
கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய , கல்வி அமைச்சு சகல பாடசாலைகளுக்கும் வழங்கியுள்ள சுற்று நிரூபங்களைக் கவனத்திற் கொண்டு நேற்று கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகின.
சித்திரை புத்தாண்டின் பின்னர் ஏற்பட்ட புத்தாண்டு கொத்தணியின் பின்னர் பாடசாலைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் தற்போது நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் கடந்த 21 ஆம் திகதி 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதலாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.
அதனையடுத்து நேற்றைய தினம் 200 க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலைகளிலும் 1 - 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.
அதிபர் -ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கல்வி செயற்பாடுகளை முழுமையாக ஆரம்பிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டன. எனினும் நேற்றைய தினம் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பெருமளவானோர் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.
இதன் போது சில பாடசாலைகளில் பெற்றோரால் ஆசிரியர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு , பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் இனிப்புக்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் வரவேற்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
கல்வி அமைச்சின் அறிவிப்பிற்கு அமைய சில மாணவர்கள் சாதாரண ஆடையிலும் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர். இணையவழி கற்பித்தல் தமக்கு மிகக் கடினமாக இருந்ததாகவும் , பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முதல்நாள் பெற்றோரின் உதவியுடன் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதோடு , கைகளைக் கழுவுதல் , சமூக இடைவெளியைப் பேணல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு
நாடுதழுவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றையதினம் கெழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் மகிழ்வுடன் ,கைகோர்த்து பாடசாலைக்கு செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.




மலையகம்
கொவிட் 19 கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டன.

மலையகத்தின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆரம்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

நுவரெலியா, தலவாக்கலை, நானுஓயா, கந்தப்பளை மற்றும் இராகலை ஆகிய பிரதேச படசாலைகளில் மாணவர்கள் கொவிட் 19 சுகாரார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளுக்கு வருகைத் தந்தனர்.

இன்றையதினம் ஆசிரியர்களின் மாணவர்களின் வருகை வழமைபோன்று காணப்பட்டதுடன் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

கிளிநொச்சியில் உள்ள வடக்கு வலயத்தில் 35 பாடசாலைகளிலும் தெற்கு வலயத்தின் 63 பாடசாலைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.

சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பேணப்பட்டு பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பெருமளவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததையும் பெற்றோர் ஆர்வத்துடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்றமையினையும் காணக் கூடியதாக இருந்தது.



பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள்,அதிபர்கள் இன்றைய தினம் பாடசாலைகளுக்க சமூகமளித்திருந்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM