(இராஜதுரை ஹஷான்)

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் முழுமையாக கைச்சாத்திடப்படுவதை தடுப்பதற்கு முயற்சிக்கிறோம்.

நியூபோர்ட் நிறுவனத்துடன் மின்கட்டமைப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் முழுமைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பங்காளிக்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளோம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த 'மக்கள்மாநாடு' புறக்கோட்டையில் உள்ள சோலிஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. 

கூட்டணியில் ஒன்றிணைந்துள்ள காரணத்தினால் கட்சிக்கு கொள்கைக்கு முரணாக செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் தொடர்பில் ஆளும் கட்சி தலைவர் கூட்டத்தின்போது அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கெரவலபிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிகட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட அனுமதி கோரி பங்காளி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து கடந்த மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.

யுகதனவி  மின்நிலையம் தொடர்பிலான பிரச்சினையை பிரதமருடனும், நிதியமைச்சருடனும் பேசி தீர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்காளி கட்சியினருக்கு அறிவித்ததாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலளார் தயாசிறி ஜயசேகர ஊடங்களுக்கு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பிரதான 11 பங்காளி கட்சி தலைவர்களும், உறுப்பினர்களுக்கும் கடந்த சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ரிலான் அலெஸின் கொழும்பில் உள்ள காரியாலயத்தில் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆளும்கட்சி தலைவர்கூட்டத்தில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில குறிப்பிட்டார்.

பங்காளி கட்சியினரது முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து 11 கட்சி தலைவர்கள் ஒன்றினைந்து எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை யுகதனவி விவகாரத்திற்கு கூட்டிணைந்து எதிர்ப்பு அறிக்கை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

யுகதனவி விவகாரம் தொடர்பில் பங்காளி கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி தயாரில்லை. ஜனாதிபதியுடன் பலவந்தமாக எமக்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட முடியாது. 

ஆகவே அவ்விடயம் தொடர்பில் மக்களை ஒன்றிணைத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளோம் என நீர்வழங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தை தொடர்புப்படுத்திய ஒப்பந்தத்தை அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்துடன் முழுமையாக கைச்சாத்திடுவதை தடுப்பதற்காக பங்காளி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகிறோம். 

நியூபோர்ட் நிறுவனத்துடன் அரசாங்கம் மின்கட்டமைப்பு தொடர்பிலான பிறிதொரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட தீர்மானித்துள்ளது.