அண்மையில் இந்தியாவின் ஜம்மு காஸ்மீர் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பாரிய தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

தொலைபேசி மூலம் இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு உரையாடிய ஜனாதிபதி சம்பவத்தில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படையினரின் குடும்பங்களுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்திலிருந்து  பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நீடித்து நிலைக்கக்கூடிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென  இதன்போது  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.