அமெரிக்காவில் தடுப்பூசி ஏற்றாத மருத்துவ ஊழியர்கள் பணி நீக்கம்

Published By: Digital Desk 3

25 Oct, 2021 | 10:37 AM
image

ம.ரூபன்.

உலகில் 2020 ஜனவரி-2021 மே வரை கொவிட் நோயால் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவத்துறை  ஊழியர்கள் மரணமானதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறையும்போது தற்போது ரஷ்யாவில் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நோய் பரவ காரணமான சீனாவில்  மீண்டும் தொற்று கூடியுள்ளது. அமெரிக்காவில்  மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொள்கிறார்கள். எனினும் சில இடங்களில் கோவிட் தொற்றால் பலர் மரணமடைகின்றனர்.

கொரோனா ஆட்கொல்லி நோய் அமெரிக்காவிலேயே பல இலட்சம் பேரை காவு கொண்டு பொருளாதாரத்தையும் பாதித்து யுத்த கால சூழலைப்போல மக்களின் வாழ்க்கை காணப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் தோல்விக்கும்,பைடனின் வெற்றிக்கும் இதுவும் காரணம் பைடன் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் தடுப்பு மருந்தை சகலரும் பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுத்து, சகலரும் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றி வருகின்றனர்.

இந்நோய் தொற்றும் குறைந்து வரும்போது மருத்துவத்துறையில் சில ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மறுத்து வருகின்றனர்.

பாதுகாப்பாக சிறுவர்கள் முதல் சகலரும் முக்கவசம் (Mask) அணிந்து சமூக இடைவெளியை பேணுகின்றனர். வர்த்தகநிலையங்கள்,உணவகங்கள், தேவாலங்கள், அலுவலகங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் கட்டாயம் என அறிவித்தல்கள் உள்ளன.

அமெரிக்காவுக்கு 33 நாடுகளின் பயணத்தடை நவம்பர் 8 நீக்கப்படவுள்ளதுடன்  72 மணி நேரத்திற்கு முன்னர் பயணிகள் தடுப்பூசியை ஏற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் நியூயோர்கில் (Northwell Health ) என்ற மிகப்பெரிய  தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் 1,400 ஊழயர்கள் கொவிட்-19 தடுப்பு மருந்தை ஏற்ற மறுத்ததால் ஒக்டோபர் 6  பணிநீக்கப்பட்டனர். உலகில் எந்தவோரு நாடும் இதேபோல வேலை நீக்கும் நடவடிக்கையை மருத்து வத்துறை ஊழியர்களுக்கு எதிராக எடுத்திருக்காது.

நியூயோர்க்கின் வைத்தியசாலைகளில் பணிபுரியும் 92 வீதமான 450,000 ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதாக சுகாதாரப்பிரிவு கூறியுள்ளது.

Presbyterian Hospital  இல் 250 ஊழியர்களும், மேற்கு வேர்ஜினியாவில் இரு பெண் ஊழியர்களும் ஒக்டோபர் 22 இல் நீக்கப்பட்டனர்.(KAISER PERMANENT) என்ற மிகப்பெரிய சுகாதார பராமரிப்பு நிறுவனத்தில் 2,200 ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பருக்குள் நியூயோர்க் (State) மாநில வைத்தியசாலைகளின் சகல ஊழியர்களும் கொவிட்- 19 தடுப்பூசியை கட்டாயம் எற்றிக்கொள்ள்வேண்டும் என  ஆளுநர் (Governor) அன்ட்ரூ கியூமோ உத்தரவிட்டிருந்தார்.

நியூயோர்க் நகரில் தடுப்பூசி ஏற்றாத 500 தாதிமாருக்கு  சம்பளமற்ற லீவு வழங்கப்பட்டது. ஹூஸ்டன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் (Houston Methodist Hospital)  தாதிமார் தடுப்பூசி  உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 26 தாதிகள் உட்பட 153 ஊழியர்கள் மருந்தை ஏற்ற மறுத்து நீக்கப்பட்டனர். இங்கு பணிபுரியும் 117 பேர் தடுப்பு மருந்தை ஏற்றும் உத்தரவுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கொலராடா கனியன்ஸ் வைத்தியசாலையில் (Colorada Canyons Hospital)-ஒரு தாதி நீக்கப்பட்டார்.

ஒகியோவில் "மாஸ்க்"அணிதல், தடுப்பூசி ஏற்றும் உத்தரவை  எதிர்த்து சிலர் வீதியில் போராட்டம் செய்தனர். நியூயோர்க்-ஸ்ரேற்றன் ஐலன்ட் பல்கலைக்கழ வைத்தியசாலைக்கு முன்பாகவும்  கடந்த ஆகஸ்ட் மாதம் தடுப்பூசிக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தாதி ஒருவர் தடுப்பூசி ஏற்றி ஒவ்வாமையால் மயக்கமானதால், இவர்கள் தடுப்பூசியை ஏற்ற மறுப்பதாகவும் கூறப்படுகிறது.கொவிட்-19 சிகிச்சைக்கான பணிகளில் மருத்துவர்கள்,தாதியர்கள்,ஏனைய தரத்திலான ஊழியர்களும் தினமும் ஈடுபடுவதால் அவர்களின் குடும்பத்தினர்,சூழவுள்ளோர்  பாதுகாப்பு கருதி தடுப்பூசியை ஏற்றுவது மிகவும் அத்தியாவசியமானது என்று  (Northwell Health)  அதிகாரி பார்பரா ஒஸ்போர்ன் கூறியுள்ளார்.

வட கரோலினா மாநிலத்தில் 15 வைத்தியசாலைகளில் 35 ஆயிரம் ஊழியர்களில் தடுப்பூசி ஏற்றாத 175 பேர் நீக்கப்பட்டனர்.சிலர் தற்காலிகமாக நீக்கப்பட்டு  தடுப்பூசி ஏற்ற கால அவகாசமும் அளிக்கப்பட்டது.லொஸ் ஏஞ்சலில் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ஒக்டோபர் வரை அவகாசம் வழங் கப்பட்டது.

பல வைத்தியசாலைகளில் கொவிட்  அச்சம் காரணமாக  சில ஊழியர்கள் சமூகமளிக்காததால் புதியவர்கள் நியமிக்கப்படுவதைப்போலவே வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் இடங்களுக்கும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அல்பனி மருத்துவ நிலையத்தில் (Albany Medical Center) இல் தடுப்பூசி மருந்தை ஏற்றாத 204 ஊழியர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நியுயோர்க்கின் சில ஆசிரியர்களும்,கல்வித்துறை ஊழியர்களும் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை மன்ஹற்றன் மாவட்ட நீதிபதி மேரி கே விஸ்கொசில் நிராகரித்து,தடுப்பூசி ஏற்றாது நோய் தொற்றால்  பிள்ளைகளும்,அவர்களின் குடும்பங்களுமே பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மன்ஹற்றன் (Manhattan) நகரில் 95 வீதமான கல்வித்திணைக்கள ஊழியர்கள் தடுப்பூசி மருந்தை பெற்றுள்ளதாகவும் 3000 ஆசிரியர்கள் பெறவுள்ளதாகவும் நகர மேயர் பில் டி பிலாசியோ தெரிவித்தார்.

United Airlines விமான நிறுவனத்தின் ஊழியர்களில் 593 பேர் தடுப்பூசியை  ஏற்ற மறுத்ததால் பணி நீக்கப்பட்டனர்.வேலை இழந்தவர்களுக்காக அரசு வழங்கும் நிவாரண உதவி கொடுப்பனவும் இவர்களுக்கு வழங்கப்படாது எனவும் இந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக மூடப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிவாரண நிதி   (Unemployment Benifits) வழங்கப்பட்டது

இவ்வாறு மூடப்பட்ட பல நிறுவனங்கள்,வர்த்தக நிலையங்கள்,தொழிலகங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளன.

சி.என்.என் ஊடக நிறுவனத்தில் தடுப்பூசி ஏற்றாத மூன்று ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க சுகாதார செயலாளர் (அமைச்சு) சேவியர் பெக்கெறா சகலரும் கொவிட் தடுப்பூசி மருந்தை ஏற்றி, இந்நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள்ளுமாறு  மக்களை கேட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17