ஹெய்ட்டியின் எரிபொருள் பற்றாக்குறை நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஐ.நா.வின் சிறுவர் நிதியம் (UNICEF) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Locals carry containers, used for oil and gasoline, during fuel shortages in Port-au-Prince, Haiti October 24, 2021.  REUTERS/Adrees Latif

ஏனெனில் ஏரிபொருள் பற்றாக்குறையானது அங்கு வைத்தியசாலைகளின் மின்சார தேவைகளை வெகுவாக பாதித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸிற்கான எரிபொருள் விநியோகமானது சமீபத்திய வாரங்களில் கடத்தல் அலைகளால் கடுமையாக சீர்குலைந்துள்ளது. 

ஆகஸ்ட் மாதம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் ஹைட்டியின் தெற்கு தீபகற்பத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு எரிபொருளை வழங்க உள்ளூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக யுனிசெஃப் கூறுகிறது.

ஆனால் நிறுவனம் கடத்தல் அச்சுறுத்தலால் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ஒப்பந்தத்தை கைவிட்டது.

ஏரிபொருள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகள் மின்சாரம் இன்றி பெரும நெருக்கடியில் உள்ளன. 

பல குழந்தை பெற்றெடுக்கும் பெண்களும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிர்களும் இதனால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.

ஹெய்ட்டியின் பல வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் நிலையான மின்தடை காரணமாக மின்சாரத்தை உறுதிப்படுத்த டீசல் ஜெனரேட்டர்களை நம்பியுள்ளன.

இதேவேளை எரிபொருளை எடுத்துச் செல்ல இயலாதமையினால் நாட்டின் முக்கிய தொலைபேசி சேவை வழங்குநர் உள்ளிட்ட தொழில்துறை குழுக்களால் வரும் நாட்களில் சேவைகளை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது.