திரவ பசளை இறக்குமதியில் கொடுக்கல் வாங்கல் விவகாரம் : பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் சி.ஐ.டி. விசாரணை

Published By: Digital Desk 4

24 Oct, 2021 | 10:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக வார இறுதி பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தொடர்பில், அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடம் சி.ஐ.டி. விசாரணை நடாத்தியுள்ளது.

Articles Tagged Under: c.i.d | Virakesari.lk

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல  வார இறுதி பத்திரிகை ஆசிரியருமான மஹிந்த இலேபெறுமவிடம், நேற்று சி.ஐ.டி. சிறப்புக் குழு  விசாரணை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.

குறித்த பத்திரிகை செய்தியை  ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர முழுமையாக நிராகரித்துள்ள நிலையில், அந்த செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பூரண விசாரணை நடத்துமாறு , பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 

அதன்படியே அது குறித்த விசாரணைகள் உடனடியாக சி.ஐ.டி.யினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே பத்திரிகை குறித்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தியாவிடமிருந்து நனோ நைட்ரஜன் யூரியா திரவ பசளை இறக்குமதியின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற அமர்வின் போது சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார். 

அதனைத் தொடர்ந்தே இன்று 24 ஆம் திகதியிடப்பட்ட வாராந்த சிங்களப் பத்திரிகை, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர்வை அதனுடன் இணைத்து வெளிப்படுத்தல் ஒன்றினை முன் வைத்திருந்தது. இந் நிலையிலேயே தற்போது அது பெரும் சர்ச்சைகலை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48