இலங்கையின் ரக்பி ஜாம்பவானான சந்திரஷான் பெரேரா தனது 60 வயதில் இன்று (24) மாலை காலமானார்.

No description available.

கடந்த ஒருவருட காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சந்திரஷான் பெரேரா, இன்று நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

சந்திரஷான் பெரேரா இலங்கையின் எழுவர் அடங்கிய ரக்பி அணியின் தலைவராகவும் சிறந்த பயிற்சியாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் செயற்பட்டார்.

இதேவேளை, சந்திரஷான் பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்தகுதி பயிற்றுநராக கடந்த 1992 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கடமையாற்றியதுடன் அணியின் ஊடக நிர்வாகியாகவும் கடமையாற்றினார்