அசலங்க, ராஜபக்ஷ ஆகியோரின் அதிரடியில் 5 விக்கெட்டுகளால் பங்களாதேஷை வெற்றிகொண்டது இலங்கை

24 Oct, 2021 | 07:37 PM
image

சரித்த அசலங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான இபதுக்கு - 20 போட்டியில் 5 விக்கெட்டுகளால் இலங்கை அபார வெற்றியைப் பெற்றது.

Chamika Karunaratne celebrates after dismissing Shakib Al Hasan, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

‍2021 ஐ.சி.சி. ஆண்கள் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத்தில் நீண்ட தூர போராட்டத்தின் பின்னர் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த இலங்கை அணி இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி இன்று பிற்பகல் ஷார்ஜாவில் இடம்பெற்றது.

Dasun Shanaka flips the coin at the toss, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

Mohammad Naim and Liton Das go out to bat, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணியில் துடுப்பாட்டத்தில் மொஹமட் நயிம் 62 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Lahiru Kumara lets out a roar after getting the wicket of Liton Das, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் லகிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Lahiru Kumara and Liton Das have an argument after the batter was dismissed, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

இந்நிலையில், 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம அதிர்ச்சி காத்திருந்தது. அணி 2 ஓட்டங்களை பெற்றிருந்தபோது முதலாவது விக்கெட்டுக்காக குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழந்து வெளியேறினார்.

Mohammad Naim and Mushfiqur Rahim put together quick runs, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

இந்நிலையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஒருகட்டத்தில் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Kusal Perera loses his stumps to Nasum Ahmed, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

இதையடுத்து இலங்கை அணியின் சரித்த அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் 172 என்ற வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

Charith Asalanka smashes one over the square-leg boundary, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

இலங்கை அணி சார்பில் சரித்த அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Bhanuka Rajapaksa plays a slog-sweep, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் நசும் அஹமட் மற்றும் சகிப் அல்ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சைபுதீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Shakib Al Hasan ended a big stand for the second wicket, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சரித்த அசலங்க தெரிவு செய்யப்பட்டார்.

Dasun Shanaka congratulates Charith Asalanka after the win, Bangladesh vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 24, 2021

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35