தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் தோல்வியடையலாம் - சஷிந்ர ராஜபக்ஷ அச்சம்

Published By: Gayathri

24 Oct, 2021 | 09:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விசத்தை உட்கொண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை தனக்கு தேர்தல் வெற்றிதான் முக்கியம் என ஜனாதிபதி கருதவில்லை. மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற்கொண்டே சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் தோல்வியடைய நேரிடலாம் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விவசாயத்துடன் தொடர்பில்லாதவர்களும், சேதன பசளை தொடர்பில் தெளிவில்லாதவர்களும்தான் பெரும்பாலான போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். சிறந்த திட்டங்களை செயற்படுத்தும்போது சவால்களும், முதற்கட்ட தோல்விகளும் ஏற்படுவது சாதாரணமானது.

தேர்தல் வெற்றியை இலக்காகக்கொண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இந்தத் திட்டத்தை செயற்படுத்தவில்லை. நாளை தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும்.

விசத்தை உண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. எனக்கு தேர்தல் வெற்றிதான் முக்கியம் என ஜனாதிபதி கருதவில்லை.

மக்களின் நலனை உடலாரோக்கியத்தை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கும் அரச தலைவர்கள் குறைவாக உள்ளனர். விமர்சனங்களுக்குள்ளாகுவது எமது குடும்பத்திற்கு சாதாரணமாகி விட்டது. விமர்சனங்களுக்கு மத்தியில் எமது கிராமங்களுக்கு நிச்சயம் செல்வோம்.

ஒருபோதும் முடிவிற்கு கொண்டு வரமுடியாது என்று குறிப்பிட்ட 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

யுத்தத்தை குறுகிய காலத்தில் நிறைவு செய்யும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றார். சிறந்த திட்டமிடலுடன் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

சேதன பசளையைக் கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நெற்செய்கையிலும், மரகறி விவசாயத்திலும் ஈடுப்படுகிறார்கள்.சேதன பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்கள்.

சேதன பசனை திட்டம் தற்போது அரசியலாக்கப்பட்டு விட்டது.சேதன பசளை திட்டம் தொடர்பில் ஒருசில குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

இதனை தேசிய பிரச்சினையாக கருத்திற்கொண்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58