(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கமைய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது.

அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமாயின் அத்தீர்மானத்தை கட்சி மட்டத்தி ல்முன்னெடுப்போம் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மஹிந்தவின் சுந்திரக் கட்சிக்கான சிறப்புரிமை இரத்தாகிவிட்டதா -- மஹிந்த அமரவீர  விளக்கம் | Virakesari.lk

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டம், விவசாயிகளின் போராட்டம் என பல பிரச்சினைகள் தற்போதைய நிலையில் காணப்படுகின்றன.

இப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டம் நிறைவு பெரும் தறுவாயில் உள்ளது.

விவசாயிகளின் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒரு தரப்பினர் சற்று விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். சேதன பசளை பாவனை குறுகிய காலத்தில் வெற்றிப்பெறாது. என்பதை ஆரம்பத்தில் கட்சி என்ற ரீதியில் குறிப்பிட்டோம்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் சுதந்திர கட்சியினர் கருத்துரைக்கையில் அதனை விளங்கிக் கொள்ளாமல் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர கட்சியினருக்கு எதிராக கருத்துரைப்பது அவர்களின் அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுஜன பெரமுனவின்பின்பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்காக அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் சுதந்திர கட்சிக்கு கிடையாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமாயின்அத்தீர்மானத்தை கட்சி ரீதியில் முன்னெடுப்போம். சுதந்திர கட்சியினரை அரசாங்கத்தில்இருந்து வெளியேறுமாறு எவராலும்குறிப்பிட முடியாது.என்றார்.

அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டவில்லை. குறைகள்இல்லாமல்எந்த அரசாங்கமும் ஆட்சியில் நிலைத்திருக்கவில்லை. ஆகவே குறைகளை திருத்திக்கொண்டு அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிக்கிறோம் என்றார்.