இலங்கை விமானப்படையினால் இயற்கை உரம் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சமான பார்வை எனும் கொள்கையின்கீழ் " பசுமையான நாடு நச்சுத்தன்மை இல்லாத நாளை " எனும் எண்ணக்கருவின் கீழ் இரசாயன உரங்களை பயன்படுத்தாது இயற்கை முறையில் உரங்களை பயன்படுத்தி விவசாய உற்பததிகளை மேற்கொள்ள இயற்கை உரம் தயாரிக்கும் வேலைத்திட்டம் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் ஆலோசனைப்படி வன்னி விமானப்படை ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலையில் விமானப்படை தளபதியின் பங்கேற்ப்பில் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படை கட்டளை வேளாண்மை பிரிவின் முழு அர்ப்பணிப்பான சேவையின் கீழ் முதற்கட்டமாக 25 தொன் நிறையுடைய இயற்கை உரங்கள் உற்பத்திக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் தொடர்ந்தும் உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் விமானப்படை வேளாண்மை பிரினால் மேற்கொள்ளப்படும் வேளாண்மை உற்பத்திகளுக்கும் விவசாய அமைச்சின் கீழ் விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆரம்ப நிகழ்வில் விமானப்படை கட்டளை வேளாண்மை பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் வன்னி விமானப்படை விமானப்படைத்தள கட்டளை அதிகாரி உட்பட சிரேஷட் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.