மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 948 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு கைதானவர்களில் 398 சந்தேக நபர்கள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவர். ஏனை 405 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள்.