தாய்வானில் ஞாயிற்றுக்கிழமை 6.2 ரிச்டெர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையகம் தெரிவித்துள்ளது.

தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு வடக்கே 65 கிலோமீட்டர் தொலைவிலும், யிலானிலிருந்து 30 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கே 60 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது சேதம் குறித்து உடனடி எந்த தகவலும் வெளியாகவில்லை.

தாய்வான் நெருப்பு வளையத்திற்கு அருகில் அமைந்துள்ளதுடன் பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் மிக அதிக நில அதிர்வு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.