முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடக்கும் டி-20 உலகக் கிண்ணத்தின் பிளாக்பஸ்டரில் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.

Image

ஒட்டுமொத்தமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமானது கிரிக்கெட் உலகில் நடைபெறும் ஒரு யுத்தமாகவே ரசிகர்களல் கருத்தப்படுகிறது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் இதை மற்றொரு விளையாட்டு என்று அழைத்தனர். ஆனால் அது தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து அணு ஆயுத அண்டை நாடுகள் மூன்று முறை போருக்குச் சென்றன, மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவும் பாரிய விரிசலில் உள்ளது.

இந்தியா கடைசியாக 2013 இல் பாகிஸ்தானை இருதரப்பு தொடரில் சந்தித்தது. அதன் பின்னர் அவர்கள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளனர்.

இறுதியாக 2019 இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டத்தில் இரு அணியும் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தியது.

எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2007 இல் தொடங்கப்பட்ட டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியா தனது பரம எதிரிகளுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளது.

Image

தற்செயலாக அந்த அனைத்து போட்டிகளையும் இந்திய அணி மகேந்திர சிங் தோனியின் தலைமையில் வென்றிருக்கிறது.

2007 இல் டி-20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் பதிப்பை இந்தியா வென்றது, பாகிஸ்தானும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் கிண்ணத்தை வென்றது. 

டி-20 தரவரிசையில் இந்தியாவும் பாகிஸ்தானும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. 

சர்வதேச போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதுடன், அண்டை நாடுகளுக்கு எதிராக 50 ஓவர் மற்றும் டி-20 உலகக் கிண்ணத்திலும் தோல்வியடையவில்லை. 

டி-20 உலக கிண்ணத்தில் இந்தியா மோதிய அனைத்து ஆட்டத்திலும் (5 போட்டி) பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. 

2012 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்று இருந்தது. இந்த ஒரு முறை மட்டுமே 20 ஓவரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

மேலும் 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த டி-20 உலகக் கிண்ணத்தின் போது இறுதிப் போட்டி உட்பட இருமுறை பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது.

இதேவளை டி-20 உலகக் கிண்ணத்தில்  முதல் முறையாக இந்திய அணியின் தலைவராக இருக்கும் விராட் கோலி மீது அனைத்து கண்களும் இருக்கும். 

33 வயதான அவர் டி-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 56.33 சராசரியில் 169 ஓட்டங்களை குவித்து சிறப்பான சாதனை படைத்துள்ளார்.