தாதா சாகேப் பால்கே விருதினை பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அக்டோபர் 24 ஆம் திகதி சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருதை வென்றது குறித்து பேசினார். 

Image

ஒரு சுருக்கமான சந்திப்பில், ரஜினிகாந்த் விரும்பத்தக்க விருதை வெல்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், விருதைப் பெறுவதைப் பார்க்க தனது குரு கேபி (கே பாலச்சந்தர்) உயிருடன் இல்லை என்பது வருத்தமாகவுள்ளதாகவும் கூறினார்.

2021 ஏப்ரல் மாதம், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக விருது வழங்கும் விழா தாமதமானது.

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் விருது வென்றது குறித்து பேசியுள்ளார்.

இந்த விருது வழங்கும் விழா நாளை (அக்டோபர் 25) டெல்லியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விருதை பெறுவார் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன.