‍2021 ‍‍ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்தில் நீண்ட தூர போராட்டத்தின் பின்னர் சூப்பர் 12 சுற்று நிலையை எட்டியுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

Image

இந்த ஆட்டம் இன்று பிற்பகல் ஷார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் சூப்பர் 12 கட்டத்திற்குள் நுழைய மிகவும் வித்தியாசமான பாதைகளைக் கொண்டிருந்தன. 

இலங்கை அவர்களின் குழுவில் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையுடன் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. அதேநேரம் பங்களாதேஷ் சூப்பர் 12 க்கான தனது வாய்ப்புக்காக இறுதி ஆட்டம் வரை காத்திருந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றி மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆட்டம் அரங்கேறுகின்றது.

இந்தப் போட்டியில் இலங்கை டி-20 உலகக் கிண்ணத்துக்காக தனது தோல்வியற்ற ஓட்டத்தைத் தொடர விரும்பும். அதே நேரத்தில் வங்கப் புலிகளும் முதல் சுற்றில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தேடும்.

இலங்கை தங்களது முதல் சுற்று போட்டிகளில்,  நமீபியாவுக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாச வெற்றியுடன் தங்கள் வெற்றிக் கணக்கை தொடங்கினர், தொரட்ந்து அயர்லாந்தை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் பின்னர் சவால் விடுத்த நெதர்லாந்தை 44 ஓட்டங்களுக்குள் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆகவே முழு நம்பிக்கையுடன் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ள இலங்கை இன்று பங்களாதேஷை எதிர்கொள்வார்கள்.

இதேவேளை சர்வதேச டி-20 பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிரு இடங்களை பிடித்துள்ள ஷாகிப் அல் ஹசன் மற்றும் வனிந்து ஹசரங்கவுக்கும் இடையிலான பனிப்போராகவும் இந்த ஆட்டம் கருதப்படுகிறது.