இரசாயன உர இறக்குமதிக்கு தடை : எவ்வாறு திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டது ? -ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

24 Oct, 2021 | 07:44 AM
image

 (நா.தனுஜா)

அரசாங்கம் சேதன உரத்தின் பயன்பாட்டிற்கு முழுமையாக நிலைமாற்றமடைவதாகக்கூறி, அதனூடாக நாட்டில் பாரியளவிலான 'உர மாபியாவை' நடைமுறைப்படுத்திவருகின்றது. அதன் ஓரங்கமாக இரசாயன உர இறக்குமதியை இடைநிறுத்துவதாகக்கூறி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அமுலில் உள்ளபோது, இந்தியாவிலிருந்து திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இரசாயன உர இறக்குமதித்தடை நடைமுறையில் உள்ளபோது அது எவ்வாறு சாத்தியமானது? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 

நாடளாவிய ரீதியில் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதுடன் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. உரத்திற்கான தட்டுப்பாட்டைத் தொடர்ந்து விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை உற்பத்திகள் வெகுவாக வீழ்ச்சிகண்டுள்ளன. 

எமது நாடு ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது 'வெல்லஸ்ஸ கலவரத்தின்' ஊடாக நாட்டின் பயிர்ச்செய்கை முழுமையாக அழிக்கப்பட்டதையொத்த நடவடிக்கை தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 சேதன உரத்தின் பயன்பாட்டிற்கு முழுமையாக நிலைமாற்றமடைவதாகக்கூறி மக்களை ஏமாற்றியிருக்கும் அரசாங்கம், அதனூடாக நாட்டில் 'உர மாஃபியாவை' தோற்றுவித்திருக்கின்றது. அதன் விளைவாக தீங்கேற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் அடங்கிய உரம் நாட்டிற்குக் கொண்டுவரப்படுகின்றது. 

அதேபோன்று இரசாயன உர இறக்குமதியை இடைநிறுத்துவதாகக்கூறி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையில் இருக்கும்போது, இந்தியாவிலிருந்து திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. 

எனவே வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையில் உள்ளபோது எவ்வாறு நாட்டிற்குள் இரசாயன உரம் கொண்டுவரப்பட்டது? அதுமாத்திரமன்றி நனோ நைட்ரஜன் உரம் என்பது வழமையான விளைச்சலை மேலும் மேம்படுத்துவதற்காக ஓர் 'ஊக்கியாகப்' பயன்படுத்தப்படுகின்ற உரமாகும். 

அதன்படி பயிர்களுக்கு வழமையாகப் பயன்படுத்தப்படுகின்ற உரத்துடன் மேலதிகமாக நனோ நைட்ரஜன் உரத்தையும் பயன்படுத்துவதைவிடுத்து, இந்த நனோ நைட்ரஜன் உரத்தை மாத்திரம் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 இதனால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே இந்த உர மாஃ;பியாவின் பின்னணியில் சீனா, இந்தியா, அமெரிக்கா அல்லது வேறு ஏதேனும் நாடுகள் இருக்கின்றனவா?

 அண்மையகாலங்களில் இந்தியாவும் சீனாவும் அவர்கள் கூறுவதற்கு அமைவாகச் செயற்பாடுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. கடந்த காலங்களில் பெருவீரர்கள் போன்று பேசியவர்கள், இப்போது அந்நிய நாடுகளின் முன்னால் மண்டியிட்டு அவர்களது ஆணைகளை செயற்படுத்துகின்றார்கள். 

எனவே தொடர்ந்தும் நாட்டுமக்களை ஏமாற்றவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கி, நாட்டை உரியவாறு நிர்வகிப்பதற்கான இயலுமை இல்லாவிட்டால், ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகி பாராளுமன்றத்திற்குள் அனைத்துக்கட்சிகளிலும் உள்ள பிரதிநிதிகளில் திறமையானவர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் நிர்வாகப்பொறுப்பை ஒப்படைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

அடுத்ததாக உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் விளைவாகச் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் நாட்டின் ஆட்சி முன்னெடுக்கப்படுமாக இருந்தால், அது வெற்றியடையாது என்று பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியிருக்கின்றார். 

எனவே அண்மையகாலங்களில் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்தின்மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளமை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இந்த நாட்டின்மீது ஏதோவோர் சாபம் ஏற்பட்டிருப்பது புலனாகின்றது. 

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்துமாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. எனவே குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06