(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர்-அதிபர்தொழிற்சங்க போராட்டத்தை முடக்கும் வகையில் எவ்விதமான திட்டங்களுமில்லாமல் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. நாளை பாடசாலைக்கு சமுகமளிப்போம். கற்பித்தல் நடவடிக்கைகளை தவிர்த்து ஏனைய செயற்பாடுகளில்ஈடுப்படமாட்டோம்.என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்-அதிபர்சங்கத்தின்காரியாலயத்தில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர்-அதிபர்சேவையில்நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை கைவிடபோவதில்லை.என்பதில் உறுதியாகவுள்ளோம்.

சம்பள பிரச்சினைக்கு சுபோதினி குழு அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தீர்வு வழங்க வேண்டும்.என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

தொழிற்சங்க போராட்டத்தை முடக்கும்வகையில்அரசாங்கம்முறையான திட்டமில்லாமல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து 

ஆரம்ப பிரிவு பாடசாலைகளையும் நாளை முதல்திறக்க தீர்மானித்துள்ளது.மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் தயாராகவுள்ளார்களான என்பது தொடர்பில் கல்வி அமைச்சு ஆராயவில்லை.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் பாடசாலைகளில் முழுமைப்படுத்தவில்லை. அத்துடன்மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணம் விட்டு மாகாணம்சென்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படும் ஆசிரியர் குறித்து கல்வி அமைச்சு எவ்வித மாற்று திட்டங்களையும் முன்வைக்கவில்லை.

 நாளை முதல் ஆசிரியர்- அதிபர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள். கற்பித்தல் செயற்பாடுகளில் மாத்திரம் ஈடுப்படுவார்கள்.பகல் 2 மணிக்கு பிறகு நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் பெற்றோரையும் இணைத்துக்கொண்டு ஈடுபடுவோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலைக்கு சமுகளமிக்கபோவதில்லை என்றார்.