அரசாங்கத்தின் தீர்மானத்தால் பல பில்லியன் டொலர்களை இழக்கும் நிலையில் நாடு ! - மனுஷ நாணயக்கார

24 Oct, 2021 | 07:14 AM
image

(நா.தனுஜா)

உரத்தை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படக்கூடிய சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சேமிப்பதற்காக தூரநோக்கற்ற வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உர இறக்குமதித்தடைத் தீர்மானத்தினால் இப்போது பல பில்லியன் டொலர்களை இழக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

 தவலம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் நேற்று சனிக்கிழமை அப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 காலிமாவட்டத்தில் தவலம, பத்தேகம உள்ளிட்ட சில பகுதிகள் தேயிலைப்பயிர்ச்செய்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களை மையப்படுத்தியதாகவே காலி மாவட்டத்தின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதுடன் ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்திக்கும் இவை பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றன. 

ஆனால் அரசாங்கம் இரசாயன உர இறக்குமதிக்குத் தடைவிதித்திருப்பதன் காரணமாக இப்பகுதியிலுள்ள தேயிலைப்பயிர்ச்செய்கையாளர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இருப்பினும் இப்பகுதி மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் வாய்களைமூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

 இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதனாலேயே அதன் இறக்குமதியை இடைநிறுத்தியிருப்பதாக மக்கள்மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைப்போன்று அரசாங்கம் கருத்து வெளியிட்டாலும், உண்மையில் டொலர் பற்றாக்குறையின் காரணமாகவே உர இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டது. 

3 மில்லியன் டொலர்களைச் சேமிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் பல பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கின்றது.

 மறுபுறம் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்கின்றன. எரிபொருளை இறக்குமதி செய்யமுடியாத நிலையில் இருக்கின்ற அரசாங்கம், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முடக்கத்தை தொடர்ந்து பேணுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் நாளாந்தம் பெருமளவு தொகைப்பணம் அச்சிடப்படுகின்றது. 

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இரட்டைப்பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஏழு மூளைகள் இருப்பதாகவும் அவரது நியமனத்தைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் தலைநிமிரும் என்றும் கூறினார்கள். அவ்வாறு தலைநிமிர்ந்த பொருளாதாரம் இதுதானா? என்று நாம் கேள்வி எழுப்பவிரும்புகின்றோம்.

 அதேவேளை எரிபொருள் விலைகளும் உயர்வடைந்துள்ளன. அதனோடு இணைந்ததாக அனைத்துப்பொருட்களின் விலைகளும் மீண்டும் அதிகரிக்கும். பெற்றோலியக்கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றார்கள். 

ஆனால் உரிய விடயதான அமைச்சர் அண்மையில் பெரும் எண்ணிக்கையானோரை அமைச்சின் சேவையில் இணைத்துக்கொண்டிருக்கின்றார். எனவே அநாவசிய செலவுகளின் விளைவாகவே நட்டம் ஏற்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18