(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று சனிக்கிழமை மாலை வரை 437 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 535 412 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 503 090 பேர் குணமடைந்துள்ளனர். 18 729 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 19  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 593 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள் நேற்று பதிவானவையாகும். இவ்வாறு இறுதியாக பதிவான 19 கொவிட் மரணங்களில் 9 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்  02 ஆண்களும், 03  பெண்களுமாக  05 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 07 ஆண்களும் 07 பெண்களுமாக 14  பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,593 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.