போராட்டம் வெடிக்கும் - துறைமுகம், மின்சாரம், பெற்றோல் ஒன்றிணைந்த சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Published By: Digital Desk 2

23 Oct, 2021 | 09:02 PM
image

இராஜதுரை ஹஷான்

யுகதனவி மின்நிலைய ஒப்பந்த விவகாரம், கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பை சீன நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் ஆகியவற்றை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இல்லாவிடின் எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம் என துறைமுகம்,மின்சாரம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை (23) கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 அரசாங்கம் யுகதனவி மின்நிலையத்தின்40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக கர்தினால் ஆண்டகை உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளமைக்கு நன்றி தெரிவித்தோம்.தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் நிவ்போர்ட் நிறுவத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சாரத்துறை கட்டமைப்பிற்குள் பிறிதொரு ஒப்பந்தத்தை நிவ்போர்ட் நிறுவனத்துடன் கைச்சாத்திட அரசாங்கம் முயற்சிக்கிறது.

கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமான 13 ஹெக்கர் காணியை சீன நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொழும்பு துறைமுகத்திற்குள் சீனாவின் ஆதிக்கம் எல்லை மீறியுள்ளது.இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்