இது முடிவல்ல ஆரம்பம் ! அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

By Digital Desk 2

23 Oct, 2021 | 04:00 PM
image

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,  பெருந்தோட்ட கம்பெனிகளின்  அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் தலைமையில் அப்புத்தளை நகரில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான பதாதைகளை  ஏந்தியவாறு கூச்சலிட்டபடி இப்போராட்டம் அப்புத்தளை  நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இப்போராட்டத்தின் விளைவாக கொழும்பு, பதுளை பிரதான வீதி வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஒப்பாரி வைத்தும், சவப்பெட்டியை ஏந்தியும் போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்,

 

அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கை திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது. குழந்தைகள் குடிப்பதற்க்கு பால் மா இல்லை, அரிசி தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலை மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந் தோட்ட நிர்வாகங்கள்  பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. 

 

மலையக மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம் இது முடிவல்ல ஆரம்பம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம்...

2022-09-27 10:02:47
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்...

2022-09-27 09:45:12
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-27 09:29:04
news-image

யாழ். நெல்லியடியில் 60 லீற்றர் கசிப்புடன்...

2022-09-27 10:16:46
news-image

வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின்...

2022-09-27 09:28:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29
news-image

இலங்கை அரசாங்கத்தின் போக்கை அடக்குமுறைகள் மீளுறுதிப்படுத்துகின்றன...

2022-09-26 21:10:02
news-image

'அதியுயர் பாதுகாப்பு வலய' உத்தரவு சட்டத்திற்கும்...

2022-09-26 20:54:52
news-image

சட்டத்தின் பிரகாரமே ஆர்ப்பாட்டங்கள் கலைக்கப்படுகின்றன -...

2022-09-26 18:48:01