ஸ்கொட்லாந்து பயணமாகிறார் ஜனாதிபதி

23 Oct, 2021 | 02:17 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம்  தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில்  கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். 

எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்த மாநாடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

கொப்-26 என்றழைக்க கூடிய இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கடந்ம ஜூலை மாதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

 இரசாயன உரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் மற்றும் சேதன இயற்கை பசளைக்கு ஜனாதிபதி வழங்கிய முக்கியத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் க்ளாஸ்கோ மாநாட்டிற்கான ஜனாதிபதியின் விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாரம் இறுதியில் செல்வார் என்று ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

 அந்த வகையில் கொப்-26 மாநாடு பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் இலக்குகளை நோக்கிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பன்நாடுகளையும் ஒன்றிணைப்பதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30