வனாதவில்லு - ரோல்மடுவ பகுதியில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை குறித்த பெண் கோரியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கிராமசேவகர் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கிராமசேவகர் வனாதவில்லு பிரதேச சபைக்குற்பட்ட ரோல்மடுவ கிராமசேவகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.