பெற்றோரையும் இணைத்துக்கொண்டு போராடுவோம் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை

Published By: Digital Desk 2

22 Oct, 2021 | 10:28 PM
image

இராஜதுரை ஹஷான்

அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய ஆசிரியர் - அதிபர் ஆகியோரால் செயற்பட முடியாது. தொழிற்சங்க போராட்டத்தை முடக்கும் தீர்மானத்தில் அரசாங்கம் அழுத்தமாக இருந்தால்,போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் நாங்களும் அழுத்தமாக இருப்போம்.

25  ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகளமிப்போம்.27ஆம் திகதி முதல் பெற்றோரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடக்கும் வகையில் அரசாங்கம் நேற்று  முதற்கட்டமாக ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறந்தது.அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

ஆசிரியர்-மாணவர்களின் வருகை  நூற்றுக்கு 98 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய  ஆசிரியர் மற்றும் அதிபர்கள் செயற்படமாட்டார்கள்.நேற்று  வெலிமட கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையின் பிரதான நுழைவாயிலின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில பாடசாலைகளில் அதிபர் காரியாலய கதவும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கழைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து. வீதியில் காட்போட் பெட்டியை எரித்தவர்கள் பொது சொத்துக்கள் தொடர்பிலான சட்டத்தின் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையிலுள்ளார்கள்.

ஆகவே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்படுகிறார் என்பது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45
news-image

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப...

2023-03-31 14:45:33
news-image

வைத்தியர்கள் இன்மையால் அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின்...

2023-03-31 14:06:26
news-image

கொலன்னாவையில் ஜீப்பை சுற்றிவளைத்த மக்கள் :...

2023-03-31 13:58:21
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மாடியிலிருந்து...

2023-03-31 13:37:05