'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'மோகன்தாஸ்'. 

இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 

இவர்களுடன் நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், மூத்த நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகி, பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், தற்போது ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் நாயகன் விஷ்ணு விஷால் அர்த்தத்துடன் கூடிய சிரிப்புடன் இருக்க, அவரது கையில் இரத்தம் தோய்ந்த ஆயுதமும், அத்துடன் மூன்று குரங்குகள் பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. 

நான்காவதாக ஒரு குரங்கு வீழ்த்தப்பட்டுள்ளதைப் போல் அமைந்திருப்பதால் இரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

விஷ்ணுவிஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.