2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீதி சேதம் -  முறைகேடான அபிவிருத்தி என மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

22 Oct, 2021 | 05:23 PM
image

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம்  தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  கண்டாவளை பிரதேச செயலகததினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில்  பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வீதி புனரமைப்புக்கான  ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி புனரமைப்பு பணிகளை தனியார் ஒப்பந்தகாரர் ஒருவர் மேற்கொள்வதற்கு மாதர் கிராம அபிவிருத்திச்  சங்கம்   அனுமதி வழங்கியிருந்திருந்தது.

எனவே குறித்த வீதியின் பணிகள்  கடந்த வருடம் ஏழாம் மாதம் நிறைவுப்பெற்றிருந்தது. ஒப்பந்த காலத்தில் புனரமைப்பு பணிகளின் தொழிநுட்ப மேற்பார்வை மற்றும் கொடுப்பனவுகளுக்கான சிபார்சுகளை கரைச்சி பிரதேச சபையே மேற்கொண்டிருந்தது.  ஆனால் குறித்த வீதியின் தரமற்ற புனரமைப்பு காரணமாக ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமுற்று பொது மக்கள்   போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.

எனவே இது தொடர்பில் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, மேற்பார்வை மற்றும் தொழிநுடப் கண்காணிப்பினை மேற்கொண்ட கரைச்சி பிரதேச சபையின் மீதும் தங்களது விசனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடனான அபிவிருத்திப் பணிகளை   கண்டுகொள்ளதாக திணைக்களங்கள் மீதும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 10:19:01
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:24:21
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08