பிக் பொஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை இரசிகர்களை கவர்ந்த பாலாஜி முருகதாஸ் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழ் திரை உலகில் கூத்துப்பட்டறை, குறும்படங்கள், நட்சத்திர வாரிசுகள் என  நடிகர்கள் பலர் அறிமுகமாகி, தங்களின் திறமைகளை நிரூபித்து நட்சத்திரங்களாக மின்னுவது வழக்கம். 

ஆனால் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமான பிக்பொஸ் என்ற நிகழ்வில் பங்குபற்றும் போட்டியாளர்களில் பலரும் நடிகர்களாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகி வருகிறார்கள். 

இந்த பட்டியலில் கடந்த பிக்பொஸ் நான்கு சீசன்களில் பங்குபற்றிய போட்டியாளர்களான ஆரவ், முகேன் ராவ், சாண்டி, தர்ஷன், கவின், ரியோ ராஜ், சோம் சேகர் உள்ளிட்ட பலர் கதாநாயகர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். 

இந்த பட்டியலில் பிக் பொஸ் சீசன் 4 இல் பங்குபற்றிய பாலாஜி முருகதாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். 

இவர் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு லிப்ரா புரொடக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் மொடலும், உடற்பயிற்சி நிபுணருமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகிறார். இவருடன் நடிக்கும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.