(எம்.எம்.சில்வெஸ்டர்)

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது. 

இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவனான யோகாநந்தன் சிம்ரோனும் இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தெற்காசிய கூடைப்பந்தாட்டத் தொடர் அடுத்தாண்டு பங்களா‍தேஷின் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது. 

இதன்படி, இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமின் தலைவராக இலங்கை கடற்படையைச் சேர்ந்த கிளின்டன் ஸ்டாலோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களைக் கொண்ட சமபலமிக்க வீரர்களைக் கொண்ட இந்த குழாத்தில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியின் ஷெஹான் பெர்னாண்டோ மற்றும் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் யோகாநந்தன்  சிம்ரோன் ஆகிய பாடசாலை மாணவர்கள் இருவரும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும். 

இலங்கை கூடைப்பந்தாட்ட குழாம் விபரம்

கிளின்டன் ஸ்டாலோன் (அணித்தலைவர்), யோகாநந்தன் சிம்ரோன், அசங்க மஹேஷ் ராஜகருணா, தசுன் நிலன்த்த மெண்டிஸ், ப்ரணீத் உடுமலகல, நிமேஷ் பெர்னாண்டோ, சசிந்து டில்ஷான் கஜநாயக்க, ‍ஷெஹான் பெர்னாண்டோ, திமோத்தி நிதூஷன், ஷெஹான் உதயங்க பெரேரா, கயான் டி குரூஸ், ஆர்னோல்ட் ‍ரெபிரென்ட், பவன் கமகே, சானுக்க பெர்னாண்டோ, ருக்சான் அத்தப்பத்து.