அரசாங்கத்தின் முகாமைத்துவத்தால் நாட்டு மக்கள் அனைவரும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் - சபையில் சஜித்

Published By: Gayathri

22 Oct, 2021 | 03:19 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் மக்களும் வறுமை நிலைக்கு தள்ளப்படுள்ளனர். 

69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டது நாட்டு மக்களை 70/77 ஆண்டு வரிசை யுகத்துக்கு கொண்டுசெல்லவா ? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி நேரத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர், 

ஓய்வூதியர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு அரச ஓய்வூதியர்கள் கடந்த இரண்டு வருடமாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர். 

ஆனால் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையையும் அதிகரித்திருக்கின்றது. அதனால் ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்வதற்கு மிகவும் கஷ்டப்படப்போகின்றனர்.

ஓய்வூதியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, அதற்காக 2020 ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு வழங்க நிதி ஒதுக்கியிருந்தது. 

அதேபோன்று ரணுக்கே அறிக்கை ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 ஆயிரத்தில் இருந்து 24 ஆயிரம் வரை அதிகரித்து, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து 2020 ஜனவரி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இந்த அரசாங்கம் அந்த நிதியை நீக்கி, தனவந்தர்களுக்கும் அரசாங்கத்தின் நண்பர்களுக்கும் வழங்கி இருக்கின்றது.

மேலும் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. 

பொருட்களின் விலை அதிகரிப்பால் ஓய்வூதியர்கள் மாத்திரமல்ல, விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர்களுக்கு சிறியதொரு தொகையை வழங்கி, அதனை எரிவாயு விலையை அதிகரிக்கச்செய்து பெற்றிருக்கின்றது. கெளரவமாக வாழ்ந்துவந்த விவசாயிகளை வீதிக்கி இழுத்திருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் பலவீனமடைந்து செல்லும்போது 7அறிவு உடைய அமைச்சர் வந்ததுடன் அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதாக தெரிவித்தனர். 7 அறிவு உடைய அமைச்சருக்கு என்ன நடந்தது என தெரியாது. இந்த அரசாங்கத்துக்கு அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது. 

ஆனால் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியும் என்பதை நாளாந்தம் உறுதிப்படுத்தி வருகின்றது. மக்களின் கேள்விக்கும் அரசாங்கத்திடம் பதில் இல்லை.

எனவே எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது என்றால், அவர்களுக்கு வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு ஒன்றையாவது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? என கேட்கின்றேன். 

அத்துடன் அரசாங்கம்  வரிசை யுகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பால்மாவுக்கு வரிசை, எரிவாயு பெற்றுக்கொள்ள வரிசை, சீமெந்தி வாங்குவதற்கு வரிசை என அரசாங்கம் 70/77 காலத்தையே மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது. 

69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டது 70/77 யுகத்தை உருவாக்குவதற்கா? என கேட்கிக்றோம். 

அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக நாட்டில் இருக்கும் 220இலட்சம் மக்களும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதற்கா மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டீர்கள் என கேட்கின்றேன்? என அவர் கேள்வியெழுப்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55