கொழும்பு, மருதானையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற தனியார் பேருந்தில் 4 அரை கிலோ கிராம் கேரளா கஞ்சா எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று அதிகாலை அக்கரைப்பற்று நகரில் வைத்து கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிலுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதான நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.