ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததை தொடர்ந்து பொது மக்கள் தங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக நீண்ட வரையில் காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

அதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெற்ரோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவினாலும் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 162 ஆகவும்  ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 116 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்  ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

(படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்)