மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பகுதியில் வீட்டின் முன் நின்ற மோட்டர் சைக்கிள் ஓன்றை திருடிச் சென்ற 3 பேரை நேற்று வியாழக்கிழமை (22) பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.

சம்பவதினமான நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் முன்னாள் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே வந்துபார்த்தபோது காணவில்லை. இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வீதியில் பொறுத்தப்பட்டிருந்த  சிசிரிவி கமராவின் உதவியுடன் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற 3 பேரையும் பொலிஸார்  கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.