எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளது.

நாடு தழுவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்தப்பட்டது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு ஒக்டோபர் 21 தளர்த்தப்படும் என்று கூறப்பட்டது.

பின்னர் அது ஒக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.