16- 19 வயது பிரிவு மாணவர்களுக்கு 'பைசர்' தடுப்பூசி ஏற்றும் பணி நுவரெலியா மாவட்டத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆயிரத்து 676 மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 11 பாடசாலைகளைச் சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு

கொட்டகலை மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலைகளில் வைத்து காலை 8 மணி முதல் நண்பகல் 10 மணிவரை தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பாடசாலை மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.