கிருமிநாசினி விநியோகத்தின் ஏகபோக உரிமையை இரு பல்தேசிய நிறுவனங்களிடம் வழங்க அரசாங்கம் முயற்சி - ரஜித் கீர்த்தி தென்னகோன்

Published By: Digital Desk 2

22 Oct, 2021 | 11:37 AM
image

நா.தனுஜா

நாட்டிற்கான கிருமிநாசினி தேவைப்பாட்டில் 92 சதவீதமானவற்றை விநியோகிக்கும் உரிமையை இருபெரும் பல்தேசிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கான ஆயத்தங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக விவசாயிகள் வெகுவாகப் பாதிப்படையநேர்வதுடன் மாத்திரமன்றி, நாட்டின் விவசாயத்துறை பாரிய அழிவிற்கு முகங்கொடுக்கும் என்று ஊவா, மத்திய மற்றும் தென்மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 

விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளை விநியோகிப்பதற்கான உரித்தை இரண்டு பல்தேசிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கான முயற்சிகள் விவசாயத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இரசாயன உரத்தின் பயன்பாட்டை இல்லாதொழிப்பதற்கான கொள்கையின் ஊடாக அதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தற்போது இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று மறுபுறம் நாட்டிற்கான கிருமிநாசினி தேவைப்பாட்டில் 92 சதவீதமானவற்றை விநியோகிக்கும் உரிமையை இருபெரும் பல்தேசிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அதன்மூலம் கமநலசேவை மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான கிருமிநாசினிகள் மற்றும் மருந்துகளைப் பணத்திற்கு விற்பனை செய்வதற்குத் தனியார் வர்த்தகர்கள் முயற்சிக்கின்றனர்.

சுதந்திர சந்தை செயற்பாடுகளில் தடைகளை ஏற்படுத்தி, தமக்கு நெருக்கமானவர்களைப் பயனடையச்செய்யும் நோக்கிலேயே அரசாங்கத்தினால் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறிமோசடி, சீனி மோசடி போன்று இதுவும் பட்டபகலில் இடம்பெறுகின்ற கொள்ளையாகும்.

விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, அதற்கு அவசியமான கிருமிநாசினிகள் மற்றும் மருந்துப்பொருட்களை நீண்ட வரிசைகளில் நின்று கொள்வனவுசெய்து, மீண்டும் தமது பயிர்நிலங்களுக்குத் திரும்பும்போது அவை முழுமையாகச் சேதமடைந்துவிடும் நிலையே காணப்படுகின்றது. 

விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க சேதன உரம் தொடர்பான ஓர் முகவராக செயற்பட்டார். ஆனால் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டவுடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தவறானது என்றுகூறி அரசாங்கத்தின் கொள்கையைக் காட்டிக்கொடுத்தார்.

இவற்றிலிருந்து அரசாங்கத்திடம் எந்தவொரு துறைசார்ந்தும் நிலையானதொரு கொள்கை இல்லையென்பது தெளிவாகியுள்ளது.

எனவே தற்போதேனும் சேதன உரம் தொடர்பான 'நாடகத்தை' ஜனாதிபதி முடிவிற்குக்கொண்டுவரவேண்டும். அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவினர் நாட்டின் விவசாயத்துறையை அழித்தொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்று ரஜித் கீர்த்தி தென்னகோன் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01