சகோதரர் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஜிமாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

சகோதரர் இருவருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய பெர்குசன் வீதி, கொழும்பு - 14 இல் வசிப்பவர் ஆவார்.

அதேநேரம் கொலை தொடர்பாக 28 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு, நேற்று மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.