பாராளுமன்ற அமர்வு இன்று (22) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

காலை 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன், நண்பகல் 12.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2021.03.10 மற்றும் 2021.04.06 ஆம் திகதிளில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப் குழு) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.